வேலூரில் சாலையில் கிடந்த 2 பவுன் கைச்செயினை ஒப்படைத்த காவலாளி


வேலூரில் சாலையில் கிடந்த 2 பவுன் கைச்செயினை ஒப்படைத்த காவலாளி
x
தினத்தந்தி 12 Aug 2021 10:00 PM IST (Updated: 12 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் கிடந்த 2 பவுன் கைச்செயினை ஒப்படைத்த காவலாளி

வேலூர்

வேலூர் கொசப்பேட்டை புதுஅக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் தனியார் பள்ளியில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாசிலாமணி தெருவில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் காயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து நடைபெற்ற இடத்தில் 2 பவுன் கைச்செயின் கோட்பாரற்று கிடந்தது. அதனை எடுத்து வைத்திருந்த சரவணன் இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் தெரிவித்து, யாராவது வந்து கேட்டால் வீட்டுக்கு வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் கைச்செயினை கேட்டு யாரும் வரவில்லை. அதனால் சரவணன் மற்றும் அவருடைய நண்பர் கோபி ஆகியோர் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று கைச்செயினை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர். சரவணனை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

சரவணன் கைச்செயினை ஒப்படைக்க நேற்று முன்தினம் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை என்பதால், உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும்படி கூறி உள்ளனர். அங்கு சென்றதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைக்கும்படி அலைக்கழிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் அவர் நேற்று காலை முதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காத்திருந்து மாலை 4 மணியளவில் கைச்செயினை ஒப்படைத்தார்.


Next Story