ஆபத்தான மின்மாற்றி மாற்றப்படுமா?
வாய்மேட்டில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேட்டில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான மின்மாற்றி
நாகை மாவட்டம் வாய்மேடு சேனாதிகாடு பகுதியில் 100 கே.வி திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மின்மாற்றி முற்றிலும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மின்மாற்றி தூணில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்புகம்பிகள் வெளியே தெரிகின்றன.
இந்த மின்மாற்றி அமைந்துள்ள பகுதி வழியாக பொதுமக்கள் கடைத்தெருவுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வந்தனர்.
மின்மாற்றி அருகே வாய்மேடு போலீஸ் நிலையம் உள்ளது.
மாற்ற வேண்டும்
தற்போது மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மின்மாற்றி சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story