மாவட்ட செய்திகள்

டெண்டர் படிவம் வழங்காததால் ஆத்திரம்:அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்வல்லத்தில் பரபரப்பு + "||" + ADMK, PMK road blockade

டெண்டர் படிவம் வழங்காததால் ஆத்திரம்:அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்வல்லத்தில் பரபரப்பு

டெண்டர் படிவம் வழங்காததால் ஆத்திரம்:அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்வல்லத்தில் பரபரப்பு
சாலை மறியல்
செஞ்சி, 

வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது நிதியிலிருந்து ரூ.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்வதற்காக நேற்று டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று அனைத்து கட்சியினரும் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
அப்போது அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வினருக்கு டெண்டர் படிவம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு பணியில் இருந்த ஒன்றிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, திடீரென அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் டெண்டர் போடுவதற்கான நேரம் முடிந்து விட்டது. இதையடுத்து அ.தி.மு.க., பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் வெற்றி. மற்றொரு தரப்பினர் மறியல், தீக்குளிக்க முயற்சி
ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றார். இதனால் மற்றொரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ; விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்
அ.தி.மு.க. தரப்பில் சசிகலா மீது புகார் அளித்துள்ள நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
3. தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
4. அ.தி.மு.க.புதிய அவைத் தலைவர் யார்...? ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அக்டோபர் 17ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொன்விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
5. "இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது" சசிகலா தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டம்...?
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.