வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்


வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:35 PM IST (Updated: 12 Aug 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சாராய ஒழிப்பு மற்றும் அரிசி கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாணியம்பாடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிபிரிவு சப்- இன்ஸ்பெக்டர் பிரகாசம் தலைமையிலான தனிப்படை போலீசார் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் அரிசி மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தவர்கள், போலீசார் வருவதை அறிந்ததும் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.  போலீசார் சென்று காரை சோதனை செய்ததில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த 25 மூட்டைகளில் 1½ டன் ரேஷன் அரிசி காரில் ஏற்றப்பட்டிருந்தது. ரேஷன் அரிசியை, போலீசார் காருடன் பறிமுதல் செய்து வாணியம்பாடி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாணியம்பாடி தாலுகா போலீசார் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story