கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றனர்


கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றனர்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:41 PM IST (Updated: 12 Aug 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றனர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா அடியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). இவரது வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்துவரும் கோழிகள் அடிக்கடி பக்கத்து நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்வதாக கூறி கோழிக்கு விஷ தீவனம் வைத்து அதில் 4 கோழிகள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று கேட்டபோது தகராறு ஏற்பட்டு லட்சுமணன் அவரது தம்பி சின்னதுரை, திருப்பதி ஆகியோரை தாக்கியதாகவும், இதில் லட்சுமணன் உள்பட 3 பேரும் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லட்சுமணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் முல்லை ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

Next Story