விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் காய்கறிகளை மாலையாக அணிந்து இருந்தனர்


விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் காய்கறிகளை மாலையாக அணிந்து இருந்தனர்
x
தினத்தந்தி 12 Aug 2021 11:18 PM IST (Updated: 12 Aug 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

ஆரணி

ஆரணி தாலுகா அலுவலகம் எதிரே விடிவெள்ளி விவசாய நலச் சங்கத்தினர், சங்க தலைவர் நெடுவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வாக்கடை புருஷோத்தமன் உள்பட விவசாயிகள்  காய்கறிகளை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வசூலிப்பதை தடுக்க வேண்டும், ஆரணி மார்க்கெட் கமிட்டியில் உள்ள தானியக் கிடங்கில் விவசாயிகளின் நெல், கேழ்வரகு மற்றும் அனைத்து விவசாயப் பொருட்களை வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அங்கு குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 6 மாதத்துக்கு ஒரு முறை பயிர் காப்பீடு தொகை வசூல் செய்வதை, ஒரு வருடமாக மாற்றி அமைக்க வேண்டும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய பல்வேறு ஆவணங்கள் கேட்டு விவசாயிகள் இழுத்தடிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த அரசு வழிவகை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story