மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை, ஆக
தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்கள் 37 பேர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுபாஷினி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த மணிவண்ணன் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த பாலுமுத்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்பட்டார்.
Related Tags :
Next Story