ஜீப், படகு, மரம் எரிந்து நாசம்
ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பழைய பயன்படாத ஜீப் மற்றும் படகு எரிந்து நாசமானது.
ராமநாதபுரம்,ஆக.
ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பழைய பயன்படாத ஜீப் மற்றும் படகு எரிந்து நாசமானது.
தீ விபத்து
ராமநாதபுரம் தாலுகா அலுவலக பின் புற பகுதியில் பயன்படுத்தப்படாத ஜீப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பேரிடர் கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் படகு ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று பிற்பகலில் இந்த பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி ஜீப் மற்றும் படகில் பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தில் வேகமாக பரவியதில் அந்த பகுதியில் இருந்த மரத்திலும் தீ பற்றி எரிந்தது. சில நிமிடங்களில் ஜீப், படகு மற்றும் மரம் முழுமையாக எரிந்தது. ஜீப் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. தீ விபத்தில் மரத்தின் பெரும்பாலான பகுதி எரிந்து விட்டது.
காரணம்?
இது பற்றி ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அனைத்தும் எரிந்துவிட்டநிலையில் தீ மேலும் அருகில் உள்ள தாலுகா அலுவலகம், பத்திர அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
தாலுகா அலுவலக வளாக பின்பகுதியில் நிகழ்ந்த இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாலுகா பின் பகுதி என்பதால் யாரோ புகை பிடித்துவிட்டு அந்த பகுதியில் போட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story