நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்


நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்
x
தினத்தந்தி 12 Aug 2021 6:13 PM GMT (Updated: 12 Aug 2021 6:13 PM GMT)

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் முழுவதும் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையத்திலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நெல்லை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் முழுவதும் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையத்திலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சுதந்திர தின விழா

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆயுத குவியலை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இதையொட்டி நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையிலும், புறநகர் மாவட்ட பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

2,200 போலீசார் பாதுகாப்பு

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரம், தண்டவாளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் போன்றவற்றையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். 

மாவட்டம் முழுவதும் சுமார் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story