நானோ யூரியா உரத்தை பயன்படுத்துவது எப்படி?
நானோ யூரியா உரத்தை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி விவசாயிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் செயல்விளக்கம் அளித்தார்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அரசு விதைப்பண்ணை அலுவலகத்தில் இந்திய உழவர் உர உற்பத்தி நிறுவனமும் வேளாண்மைத் துறையும் இணைந்து யூரியா உரத்துக்கு மாற்றாக நானோ யூரியா உரம் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஜெகநாதன், துணை இயக்குனர்கள் சுந்தரம், விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கச்சிராயப்பாளையம் வேளாண்மை அலுவலர் நித்தியா வரவேற்றார். இதில் யூரியா உரத்துக்கு மாற்றாக நானோ யூரியா பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் விளக்கி கூறினார்.
பேட்டரி தெளிப்பான்
தொடர்ந்து விதைப் பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் கலெக்டர் ஸ்ரீதர் நானோ யூரியாவை தெளித்து செயல்விளக்கம் அளித்தார். மேலும் பண்ணை விவசாய குழுக்களுக்கு 10 பேட்டரி தெளிப்பான் மற்றும் அரை லிட்டர் நானோ யூரியா ஆகியவற்றையும் அவர் வழங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story