நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,830 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,830 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 12:50 AM IST (Updated: 13 Aug 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,830 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47,830 ஆக அதிகரித்து உள்ளது.
53 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,777 அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,830 ஆக அதிகரித்து உள்ளது.
ஒருவர் பலி
இதற்கிடையே நேற்று 62 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 46 ஆயிரத்து 801 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 570 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 458 பேர் பலியாகி இருந்தனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 வயது நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 459 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story