கரோலினா குடியிருப்பு பகுதிக்கு ‘சீல்’
கரோலினா குடியிருப்பு பகுதிக்கு ‘சீல்’
குன்னூர்
குன்னூர் அருகே உபதலை ஊராட்சிக்கு உட்பட்டது, கரோலினா குடியிருப்பு பகுதி. இங்கு சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில் அந்த குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கு குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், ஜனார்த்தனன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் விரைந்து சென்றனர்.
தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணியை தீவிரப்படுத்தினர். மேலம் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் 3 சாலைகளையும் சீல் வைத்து அடைத்தனர். மேலும் அங்கிருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர். ஒரே குடியிருப்பு பகுதியில் 18 பேருக்கு தொற்று உறுதியானதால், பரபரப்பு மற்றும் பீதி ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story