மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு


மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 13 Aug 2021 12:56 AM IST (Updated: 13 Aug 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

அச்சன்புதூர்:

புளியங்குடியை அடுத்த சிந்தாமணி மேல ரதவீதியை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 45). இவர் நேற்று முன்தினம் தனது குடும்ப செலவிற்காக டி.என்.புதுக்குடி பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று ரூ.2½ லட்சம் எடுத்தார். பின்னர், அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வழியில் புளியங்குடிக்கு தெற்குப்பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறதா? என்று விசாரிப்பதற்காக, வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.2½ லட்சம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் சொக்கம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மோட்டார் சைக்கிளில் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story