சைதாப்பேட்டை கோர்ட்டில் ‘பப்ஜி’ மதன் மீது 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


சைதாப்பேட்டை கோர்ட்டில் ‘பப்ஜி’ மதன் மீது 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 13 Aug 2021 1:53 PM IST (Updated: 13 Aug 2021 1:53 PM IST)
t-max-icont-min-icon

சைதாப்பேட்டை கோர்ட்டில் ‘பப்ஜி’ மதன் மீது 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆலந்தூர்,

‘பப்ஜி’ உள்பட ஆன்-லைன் விளையாட்டுகள் குறித்து ‘யூ டியூப்’பில் பெண்கள் உள்பட பலரிடம் ஆபாசமாக பேசியதாக வந்த புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி ‘பப்ஜி’ மதனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொரோனா காலத்தில் உதவி செய்வதாக கூறி 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி வரை பணம் பெற்றதாகவும் ‘பப்ஜி’ மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில் சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் ‘பப்ஜி’ மதன் மீது ஆவணங்கள் உள்பட சுமார் 1,600 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 32 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அரசு தரப்பு வக்கீல் விமலா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். விரைவில் இதுபற்றி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Next Story