கயத்தாறு அருகே ஆடு திருடிய வாலிபர் கைது


கயத்தாறு அருகே ஆடு திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2021 5:19 PM IST (Updated: 13 Aug 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே பணிக்கர்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருடைய மனைவி பூல்தாய் (வயது 48). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 7 ஆடுகள் திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆடுகளை திருடியது ஆத்திகுளத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் சுடலைமணி (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுடலைமணியை போலீசார் கைது செய்து, 7 ஆடுகளையும் மீட்டு பூல்தாயிடம் ஒப்படைத்தனர்.

Next Story