திருவண்ணாமலையில் அண்ணா நுழைவு வாயில் இடித்து அகற்றம்


திருவண்ணாமலையில் அண்ணா நுழைவு வாயில் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 13 Aug 2021 5:23 PM IST (Updated: 13 Aug 2021 5:23 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா நுழைவு வாயில் இடித்து அகற்றம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை, தென்றல்நகர் பகுதியில் போளூர் சாலையில் அண்ணா நுழைவு வாயில் அமைந்திருந்தது. இந்த நுழைவு வாயில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இது, திருவண்ணாமலையின் ஒரு அடையாள சின்னமாக விளங்கி வந்தது. 

இந்தநிலையில் சமீபத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அண்ணா நுழைவு வாயிலை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க திட்டமிட்டு இருந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து இல்லாத நேரத்தில் திடீரென அண்ணா நுழைவு வாயில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அங்கு மீண்டும் புதுப்பொலிவுடன் நுழைவு வாயில் அமைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story