தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்


தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்
x
தினத்தந்தி 13 Aug 2021 5:39 PM IST (Updated: 13 Aug 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021 22ம் ஆண்டுக்கான பட்ஜெட், தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று திருப்பூர் தொழிற்துறையினர் வரவேற்றுள்ளனர்.

 திருப்பூர்
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  2021   22ம் ஆண்டுக்கான பட்ஜெட், தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று திருப்பூர் தொழிற்துறையினர் வரவேற்றுள்ளனர். 
பாராட்டு 
தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  2021  2022ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதிலும் பல மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும். கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து திருப்பூர் தொழில்துறையினர் கருத்துகள் தெரிவித்துள்ளனர். இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறியதாவது
தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். திருப்பூரில் பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் அமைப்பது. டைடல் பார்க் மற்றும் ஜவுளித்துறைக்கு அதிக கவனம் செலுத்துதல்.
தொலைநோக்கு திட்டம் 
துணி நூல் துறைக்கு தனி இயக்குனரகம் உருவாக்குதல். சிறு, குறு தொழில் சிக்கல்களை ஆராய குழு அமைத்தல். நிறுவனங்களு கடன் உதவி. பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைப்பு. 
ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  தொலைநோக்கு திட்டத்துடன் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது தமிழகத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட் ஆகும். 
இவ்வாறு அவர் கூறினார். 
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரை இணைக்க வேண்டும். கூடுதலாக 2 பொதுசுத்திகரிப்பு மையங்கள் அமைப்பு. தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். சிப்காட்டில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தொழில்நுட்ப ஜவுளித்துறையை மேம்படுத்த திட்டம் என ஏராளமான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம். 
இவ்வாறு அவர் கூறினார். 
சிறப்பு திட்டங்கள் 
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் சைமா தலைவர் வைக்கிங் ஏ.சி. ஈஸ்வரன் கூறியதாவது:- தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் குடியிருப்பு வசதி அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 
திருப்பூரிலும் இந்த திட்டத்தை அமைக்க வேண்டும். திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி நிலையம் அமைத்து புதிய வேலை வோய்ப்புகளை உருவாக்குதல். இதுபோன்று ஏராளமான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம். என்றார். 
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் டீமா முத்துரத்தினம் கூறியதாவது:- நிதி பற்றாக்குறை உள்ள சூழலில் தமிழக அரசு அறிவித்துள்ள, இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம். ஜவுளித்தொழிலுக்கு தேவையான நூல், துணி வகையில் கவனம் செலுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைப்பதாக அறிவிப்பு. 
வீட்டு வசதி துறைக்கு ரூ.3 ஆயிரத்து 954 கோடி ஒதுக்கீடு போன்றவற்றை வரவேற்கிறோம். என்றார். 
பெருநகர் வளர்ச்சி குழுமம் 
எலாக்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:- அரசின் திட்டங்கள் காரணமாக திருப்பூர் மேலும் வளர்ச்சியடையும்.  என்றார். 
இதுபோல் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் உள்பட தொழில்துறையினர் பலரும் இந்த பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்தனர். 
-


Next Story