சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிகாரிகள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்


சுதந்திரதினத்தை முன்னிட்டு  தூத்துக்குடியில் அதிகாரிகள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
x
தினத்தந்தி 13 Aug 2021 6:22 PM IST (Updated: 13 Aug 2021 6:22 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிகாரிகள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், அதிகாரிகள் 7.5 கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
சைக்கிள் பயணம்
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய கடலோர காவல் படை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இருந்து சைக்கிள் பயணத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்து, பயணத்தில் சைக்கிளை ஓட்டி சென்றார். கலெக்டர் தலைமையில் நடந்த இந்த சைக்கிள் பயணத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இந்திய கடலோர காவல் படை கமாண்டர் அரவிந்த் சர்மா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.
விழிப்புணர்வு
முத்துநகர் கடற்கரையில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் தெற்கு கடற்கரை சாலை வழியாக, துறைமுக கடற்கரை வரை 7.5 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. அப்போது, சுதந்திர தினம் மற்றும் கொரோனா குறித்தும் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், கடலோர காவல் படையினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story