பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பூரில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூரில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதை முறைப்படுத்தக்கோரி பா.ஜனதா கட்சியின் சார்பில் சாலைமறியல் நேற்று காலை பாளையக்காடு பஸ் நிறுத்தம் முன்பு காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சீனிவாசன், நல்லூர் மண்டல பொதுச்செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம்
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையாளர் வாசுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘பாளையக்காடு பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் பற்றாக்குறையால் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் குடிநீர் வினியோகம் சரியாக இருந்தது. ஆனால் தற்போது குடிநீர் வினியோகத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுகாதாரத்தை பேண வேண்டும். குடிநீர் திறப்பது குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதுபோல் குடிநீர் வினியோகம் தகுந்த அளவு வினியோகம் செய்யப்பட்டத்தை அப்பகுதி மக்களிடம் உறுதி செய்யும் வகையில் கையெழுத்து பெற வேண்டும்’ என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து, ‘குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்பட்டு வினியோகம் செய்யப்படும். கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஏற்கனவே பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரமாக ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story