புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள சிவசக்தி காலனியில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் உத்திரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிவசக்தி காலனியைச்சேர்ந்த யுகபாரதி வயது 21 என்பவரதுவீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 16 ஆயிரத்து 370 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மொத்த எடை 81 கிலோ.
இந்த புகையிலை பொருட்களை உடுமலை சத்திரம் வீதியைச்சேர்ந்த வியாபாரி ஜெயச்சந்திரன் 54 யுகபாரதியிடம் கொடுத்து இருப்பு வைத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து யுகபாரதி, ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story