கயத்தாறில் தியாகிகள் தினம்


கயத்தாறில் தியாகிகள் தினம்
x
தினத்தந்தி 13 Aug 2021 7:44 PM IST (Updated: 13 Aug 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் தியாகள் தினம் அனுசரிக்கப்பட்டது

கயத்தாறு:
கயத்தாறில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் அவரது மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நேரு யுவகேந்திரா சார்பில், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேரு யுவகேந்திரா மாவட்ட அதிகாரி சுசில்பிரசாரம்பகித், நாகம்பட்டி மனோ கல்லூரி முதல்வர் மூக்கையா, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலிப், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டப அலுவலர் முத்து ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மணிமண்டபத்தின் முன்பிருந்து தொடர் ஓட்ட பேரணியை தாசில்தார் தொடங்கி வைத்தார். 

Next Story