திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Aug 2021 9:34 PM IST (Updated: 13 Aug 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திட்டச்சேரி:
திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் ஆதினங்குடி, பண்டாரவடை, மெயின்ரோடு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட வருகிறது. கடந்த சில மாதங்களாக  இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருமருகல்-நன்னிலம் சாலையில் ஆதினங்குடி பஸ் நிறுத்தம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை, ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக  குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். 
இதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருமருகல்-நன்னிலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story