பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டுகள் குலுக்கல் முறையில் தேர்வு
உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகளை மாநில தேர்தல் ஆணையம் குலுக்கல் முறையில் தேர்வு செய்தது.
புதுச்சேரி, ஆக.
உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகளை மாநில தேர்தல் ஆணையம் குலுக்கல் முறையில் தேர்வு செய்தது.
குலுக்கல் முறையில் தேர்வு
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்பின் அட்டவணை இனத்தவர், அட்டவணை இன பெண்கள், மற்றும் பொது பெண்கள் ஆகியோருக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் துறை அலுவலகத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கீடு குலுக்கல் முறையில் தேர்ந் தெடுக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ், சிறப்பு பணி அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் ஆகியோர் குலுக்கல் நடத்தினர்.
வார்டுகள் விவரம்
இதில் தேர்தல் ஆணைய அழைப்பின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டுகள் செய்யப்பட்டன.
புதுவை நகராட்சியில் (11 வார்டுகள்) சக்திநகர், வைத்திக்குப்பம், நேதாஜி நகர், குருசுக்குப்பம், நைனார்மண்டபம், இளங்கோநகர், ராஜ்பவன், டி.வி.நகர், நெல்லித்தோப்பு, பாரதிதாசன் நகர், முத்தியால்பேட்டை (கிழக்கு) ஆகிய வார்டுகளும், உழவர்கரை நகராட்சியில் (14 வார்டுகள்) அரும்பார்த்தபுரம், பிள்ளைச்சாவடி, திலாசுப்பேட்டை, வி.பி.சிங் நகர், குமரன் நகர், கதிர்காமம், சண்முகாபுரம், நாவற்குளம், அசோக் நகர், காமராஜ் நகர், வினோபாநகர், லாஸ்பேட்டை, சாரம், ஜவகர் நகர் ஆகிய வார்டுகள் தேர்வு செய்யப்பட்டன.
காரைக்கால்
இதேபோல் காரைக்கால் நகராட்சியில் (5 வார்டுகள்) தர்மாபுரம், ஒப்பிலியப்பன்கோவில், அம்மையார்கோவில், தலத்தெரு, அந்தோணியார்கோவில் ஆகிய வார்டுகள் தேர்வு செய்யப்பட்டன.
மாகி, ஏனாம் நகராட்சிகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டுகள் தேர்வு செய்யப்பட்டன. கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் பிற்படுத்தப்பட்டோர் போட்டியிடும் வார்டுகளும் தேர்வு செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் ஜான்குமார், ரிச்சர்ட், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க.விக்ரமன், பா.ஜ.க. துணைத்தலைவர் ரவிச்சந்திரன், என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால், பொருளாளர் வேல்முருகன், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், அ.தி.மு.க. சார்பில் மோகன்தாஸ், தி.மு.க. சார்பில் அகிலன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story