ஒரு நாள் தொற்று 100 கடந்தது
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100ஐ கடந்தது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100ஐ கடந்தது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியாகினர்.
105 பேருக்கு கொரோனா
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
23 நாட்களுக்கு பிறகு
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 937ஆக உள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 148ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 906 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 பேர் நேற்று பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 883ஆக உள்ளது. 23 நாட்களுக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100ஐ கடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story