பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?
ஓகைப்பேரையூரில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூத்தாநல்லூர்:
ஓகைப்பேரையூரில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஓகைப்பேரையூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது.
மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தொட்டியை தாங்கி நிற்கும் தடுப்பு தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து சாய்ந்து உள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையத்தில் ஆபத்தாக உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இந்த தொட்டி திடீரென இடிந்து விழுந்தால் அருகில் உள்ள அரசு பள்ளி மற்றும் கோவில் வளாகத்தில் விபத்து ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் பழுதடைந்த தொட்டியை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story