ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா
ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா நடக்கிறது. அதில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுகிறார். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
ஊட்டி,
ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா நடக்கிறது. அதில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுகிறார். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி காலை 10 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு நடக்கிறது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொள்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின விழா எளிமையாக நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இல்லை. சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு அலுவலர்களுடன் எளிமையாக நடக்கிறது என்றார்.
முன்னேற்பாடுகள்
விழா நடக்கும் விளையாட்டு மைதானத்தில் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. தற்காலிகமாக மேடை மற்றும் அரசு அலுவலர்கள் அமர சாமியான பந்தல் போடப்பட்டு வருகிறது. கொடிக்கம்பம் நடப்படுகிறது. நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்ததால், வளர்ந்த புற்கள் சமமாக வெட்டப்பட உள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வாகன சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று (சனிக்கிழமை) போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
Related Tags :
Next Story