மது கடத்தலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது கடத்தி வந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொறையாறு:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது கடத்தி வந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசார் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் மது கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் காரைக்கால் பகுதியையொட்டி உள்ள, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பொறையாறு அருகே நண்டலாறு சோதனை சாவடியில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பொறையாறு இன்ஸ்பெக்டர் சுகந்தி, மதுவிலக்கு காவல் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுச்சேரி, ஆயப்பாடி மற்றும் கொளக்குடி ஆகிய பகுதிகளில் புதிதாக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.
30 பேர் மீது வழக்கு
இதேபோல் பொறையாறு அருகே நல்லாடை சோதனை சாவடியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனைகளில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு மது கடத்தி வந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய போலீசார் வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர்.
Related Tags :
Next Story