தனியார் மருத்துவமனையில் பெண் சாவு


தனியார் மருத்துவமனையில் பெண் சாவு
x
தினத்தந்தி 13 Aug 2021 11:47 PM IST (Updated: 13 Aug 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் தனியார் மருத்துவமனையில் பெண் இறந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தனியார் மருத்துவமனையில் பெண் இறந்தார். 

தர்மபுரி மாவட்டம் மத்தூர் நாகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 29). இவர் பிரசவத்திற்காக  திருப்பத்தூர் டவுன் கச்சேரி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு 15 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பிரசவ சிகிச்சைக்கு பின் தாய்-சேய் வீடு திரும்பினர்.

 உடல்நலக்குறைவால் ரம்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யும் போதுமான ரம்யா இறந்து விட்டார்.

 தவறான சிகிச்சையால் ரம்யா உயிர் இழந்ததாக கூறி  அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 

அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக கூறியபோது அவரது கணவர் அருண்குமார் கோயமுத்தூரில் இருந்து வரவேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

போலீசார் சமரசத்துக்கு பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story