2 பேர் கைது
2 பேர் கைது
பொள்ளாச்சி
கோவை குனியமுத்தூர் ஜே.பி. நகரை சேர்ந்தவர் நவுசத் பழனிசாமி (வயது 38). இவர் தனது நண்பர் கிஷோர் என்பவருடன் சொந்த வேலை காரணமாக கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் 2 பேரும் கோவை ரோட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு மதிய உணவு சாப்பிட சென்றனர்.
-
அதன்பிறகு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்ல முயன்றனர். இதையடுத்து 2 பேரையும் பிடித்து நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆனைமலையை சேர்ந்த மணிகண்டன் (20), பட்டத்துராஜா (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story