ராமநாதபுரத்தில் மின்சாரம் நிறுத்தம்


ராமநாதபுரத்தில் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Aug 2021 11:49 PM IST (Updated: 13 Aug 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் நகர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- ராமநாதபுரம் பட்டினம் காத்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் பகுதிகளான பாரதி நகர், ஆசி மருத்துவமனை, முல்லை நகர், நேரு நகர், மகா சக்தி நகர், பாரதிநகர், ஜோதி நகர், வ.உ.சி.நகர், அவ்வை தெரு, காலாங்கரை, குமரய்யா கோவில் மெயின் ரோடு, மருதுபாண்டியர் நகர், பாரதி நகர் மீன் மார்க்கெட், சேட் இப்ராகிம் நகர், டி-பிளாக் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story