கூட்டுறவு சங்க செயலாளர் பலி


கூட்டுறவு சங்க செயலாளர் பலி
x
தினத்தந்தி 13 Aug 2021 11:52 PM IST (Updated: 13 Aug 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு சங்க செயலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொண்டி, 
திருவாடானை தாலுகா மல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது58). இவர் எட்டுகுடி கூட்டுறவு சங்க செயலாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுள்ளார். திருவாடானை சமத்துவபுரம் அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே சென்று கொண்டிருந்தபோது சமத்துவபுரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராம்கி என்பவர் ஓட்டிச்சென்ற  மோட்டார் சைக்கிள் மணிமுத்துவின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மணிமுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவாடானை போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story