பாறாங்கல்லை தலையில் தூக்கிப்போட்டு கட்டிட மேஸ்திரி கொலை
ஆம்பூர் அருகே வீட்டின் திண்ணையில் படுத்துத் தூங்கிய கட்டிட மேஸ்திரியின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு நசுக்கிக் கொலை செய்த கல் நெஞ்சம் படைத்த தாய் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே வீட்டின் திண்ணையில் படுத்துத் தூங்கிய கட்டிட மேஸ்திரியின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு நசுக்கிக் கொலை செய்த கல் நெஞ்சம் படைத்த தாய் கைது செய்யப்பட்டார்.
கட்டிட மேஸ்திரி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 36), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி கவுரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய சிவக்குமார் தனது வீட்டின் திண்ணையில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று காலை எழுந்து கவுரி வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சிவக்குமார் மர்மமான முறையில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாகக் கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த கவுரி கூச்சலிட்டு கதறி அழுதார். அவரின் அழுகை சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் திரண்டு வீட்டுக்கு வந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். சி
வக்குமாரை யாரோ கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
அசிங்கமாக பேசி சித்ரவதை செய்தான்
சிவக்குமாரின் தாய் ராஜேஸ்வரியை (57) போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர், போலீசாரிடம் வாக்குமூலமாக கூறிய விவரம் வருமாறு:-
எனது மகன் சிவக்குமார் தினமும் மதுபானத்தைக் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, என்னை ஒரு தாய் என்றும் பார்க்காமல் அசிங்கமாகப் ேபசி, சித்ரவதைச் செய்து வந்தான். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தேன். அவன் தனியாகத் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்ய திட்டமிட்டேன்.
மகன் சிவக்குமாா் வீட்டுத் திண்ணையில் தனியாகப் படுத்துத்தூங்கினான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொண்ட நான் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வந்து அவனின் தலையில் போட்டு நசுக்கிக் கொலை செய்தேன். ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து விட்டான். மறுநாள் காலை நான் ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர்.
மேற்கண்டவாறு ராஜேஸ்வரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
இதையடுத்து கல் நெஞ்சம் படைத்த தாய் ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுத்திண்ணையில் படுத்துத் தூங்கிய கட்டிட மேஸ்திரியை பெற்றத் தாயாரே பாறாங்கல்லைத் தூக்கி தலையில் போட்டு நசுக்கிக் கொலை செய்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story