குமரியில் இன்று 94 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
குமரியில் இன்று 94 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி வராததால் சிறப்பு முகாம்கள் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று மதுரையில் இருந்து 23,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆன்லைன் டோக்கன் முறையில் நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளி உள்பட 10 இடங்களிலும், நேரடி டோக்கன் முறையில் நாகர்கோவில் நகரில் உள்ள நகர்நல மையங்கள், பள்ளி, கல்லூரிகள் என மொத்தம் 16 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 84 இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. நேரடி டோக்கன் முறையில் நடைபெறும் முகாம்களில் நாகர்கோவில் கோட்டார் கவிமணி பள்ளி, குழித்துறை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் வெளிநாடு செல்பவர்களுக்கான 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதுதவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கோவிஷீல்டு தடுப்பூசி கட்டண அடிப்படையில் போடப்படுகிறது.
Related Tags :
Next Story