சொந்த நிலத்தில் மணல் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
மணல் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
அரக்கோணம்
அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் அரக்கோணம் தாலுகா முழுவதும் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் ரோந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் தனது நிலத்தில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி மணல் எடுத்துக் கொண்டு இருந்தார்.
தகவல் அறிந்து வந்த தாசில்தார் பழனிராஜனை பார்த்ததும் பொக்லைனை விட்டு விட்டு சந்ேதாஷ் தப்பியோடி விட்டார். பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story