கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2021 12:32 AM IST (Updated: 14 Aug 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி:
நெல்லை பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் பேச்சி என்ற வடபேச்சி (வயது 34). இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு தென்காசியில் நடைபெற்ற இரு வெவ்வேறு கொலை சம்பவங்களில் தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தற்போது வரை தலைமறைவாக இருந்து வந்தார். 
இதைத்தொடர்ந்து அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி பேச்சியை நேற்று கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பாராட்டினார்.

Next Story