உள்ளாட்சி தேர்தல் குறித்து தி.மு.க. ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடையநல்லூரில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
அச்சன்புதூர்:
கடையநல்லூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தி.மு.க. ஆலோசனை கூட்டம் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு ரசாக், மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சேக்தாவூது, செல்லப்பா, மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு ஆணை பிறப்பித்த தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை நியமனம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை வழிகாட்டுதலில் பகுதி வாரியாக தேர்தல் பணிக்குழுவினரை நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், நகர, பேரூர், கிராம ஊராட்சி கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story