போலீஸ் நிலையத்துக்கு எதிரில் பதுக்கிய 1,037 மதுபாட்டில்கள் பறிமுதல்


போலீஸ் நிலையத்துக்கு எதிரில் பதுக்கிய 1,037 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Aug 2021 1:49 AM IST (Updated: 14 Aug 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் போலீஸ் நிலையத்துக்கு எதிரில் பதுக்கிய 1,037 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர், 
விருதுநகரில் போலீஸ் நிலையத்துக்கு எதிரில் பதுக்கிய 1,037 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனியார் மதுபார் 
கொரோனாபரவல் காரணமாக தளர்வுளுடனான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் மது பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரவலாக மது பார்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.  
இந்தநிலையில் நேற்று விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருணாசலம் தலைமையில் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள தங்கும் விடுதியுடன் இணைந்த தனியார் மது பாரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 1037 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மது விற்ற ரூ.18 ஆயிரத்து 300-ம் இருந்தது. போலீசார் மது பாட்டில்களையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர். 
2 பேர் கைது 
இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மது விற்ற காந்திராஜன் (வயது 65), வேல்முருகன் (43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.  போலீஸ் நிலையத்திற்கு எதிரிலேயே விதிமுறைகளை மீறி பெருமளவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Next Story