நாக சதுர்த்தி விழா
கோவலில் நாக சதுர்த்தி விழா நடைபெற்றது.
பெரம்பலூா்:
பெரம்பலூரில் மதரசா சாலையில் அம்சா நாக கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சவுபாக்கியவிநாயகர், ராகு- கேது மற்றும் சங்கடம் தீர்க்கும் ஜெய் அனுமான் சன்னதிகள் உள்ளன. நாக கன்னியம்மன் கோவிலில் நாகசதுர்த்தி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் வடக்கு தெப்பக்குளம் கரையில் இருந்து பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து நாககன்னி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று மதியம் பொங்கல் வழிபாடும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு காவிரி ஆற்றில் காப்பு விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி ராஜ்குமார் மற்றும் குடிபாட்டு மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story