கடன் தொல்லையால் அழகு நிலைய பெண் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


கடன் தொல்லையால் அழகு நிலைய பெண் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 Aug 2021 3:59 AM IST (Updated: 14 Aug 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் அழகு நிலைய பெண் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

பாலக்கோடு:
பாலக்கோட்டில் கடன் தொல்லையால் அழகு நிலைய பெண் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அழகு நிலைய உரிமையாளர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்தவர் சண்முகம். ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 33). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கவிதா பாலக்கோடு எம்.ஜி. ரோட்டில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இவர் தொழிலுக்காக பலரிடம் பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணம் கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு வந்துள்ளனர். 
ஆனால் கவிதாவால், அவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவிதா நேற்று காலை விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அழகு நிலைய பெண் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story