உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியவர் பிடிபட்டார்


உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 14 Aug 2021 2:14 PM IST (Updated: 14 Aug 2021 2:14 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரமேரூர், 

உத்திரமேரூர் பேரூராட்சி வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன். கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1¾ பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தார். இந்த நிலையில் உத்திரமேரூர் அருகே அம்மையப்பநல்லூர் பகுதியில் நேற்று உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபரை மடக்கிபிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். போலீஸ் விசாரணையில் அவர் களியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (வயது 20) என்பதும் கடந்த மாதம் தியாகராஜன் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு பவுன் தங்கநகையை பறிமுதல் செய்தனர்.

Next Story