உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகூர்,
நாகூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்ப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகூர் நகர துணை தலைவர் கோபி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். விவசாய பிரிவு மாநில செயலாளர் மீரான் ஹுசைன், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் மக்சூது சாஹிப், வர்த்தக காங்கிரஸ் துணை தலைவர் சார்புதீன் மறைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்ற எம்பி.க்கள் குழுவை அமைக்க வேண்டும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை மத்திய அரசு அரசு, திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உலமாக்களுக்கு வாரிய அட்டை மூலம் ரூ.5 ஆயிரம் கிடைக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மனித உரிமை நகர தலைவர் கவுது நன்றி கூறினார்.
Related Tags :
Next Story