கொந்தகையில் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் இருந்த மண்பாண்டங்கள்


கொந்தகையில் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் இருந்த மண்பாண்டங்கள்
x
தினத்தந்தி 14 Aug 2021 5:27 PM IST (Updated: 14 Aug 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

கொந்தகையில் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் இருந்த மண்பாண்டங்கள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன.

திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது. கொந்தகையில் 13-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 2 முதுமக்கள் தாழிகள் சேதாரமில்லாமல் முழுவடிவத்துடன் கிடைத்தன. அந்த தாழிகளை திறந்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதனுள் மனித மண்டை ஓடு, தாடை எலும்பு, விலா எலும்பு, கைகால் எலும்பு, பற்கள், இரும்பு வாள், சிறிய மண் கிண்ணங்கள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன. மற்றொரு தாழியில் இருந்த மண்ணை அகற்றியதில் சிறிய மண் பானையும், சிறிய மண் கிண்ணமும், சிதைந்த நிலையில் எலும்புகளும் கிடைத்துள்ளன. கொந்தகையில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story