கேரள இளம்பெண் எரித்துக்கொலை முகநூல் நண்பரை தேடி வந்த இடத்தில் பயங்கரம்


கேரள இளம்பெண் எரித்துக்கொலை முகநூல் நண்பரை தேடி வந்த இடத்தில் பயங்கரம்
x
தினத்தந்தி 14 Aug 2021 6:16 PM IST (Updated: 14 Aug 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே கேரள இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார். முகநூல் நண்பரை தேடி வந்த இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கத்தேரி மேல்கொட்டாய் பகுதியில் நேற்று மாலை உடல் எரிந்த நிலையில் இளம்பெண் பிணம் கிடந்தது. தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் உடல் எரிந்து கிடந்த பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரஞ்சனி (வயது 24) என்பது தெரிய வந்தது.

அவர் எப்படி இங்கு வந்தார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ரஞ்சனிக்கும், காவேரிப்பட்டணம் அருகே வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சூர்யா (22) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் முகநூல் மூலம் பேசி வந்துள்ளனர்.

இதற்கிடையே ரஞ்சனி, முகநூல் நண்பரான சூர்யாவை தேடி வேலம்பட்டிக்கு வந்ததாக ெதரிகிறது. அப்போது சூர்யாவுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்தது.

அதன்பிறகு ரஞ்சனி, சொந்த ஊருக்கு செல்லாமல் அங்கேயே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக ரஞ்சனியின் முகநூல் நண்பரான சூர்யாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ரஞ்சனி சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்த போது அங்கு யாருடனும் தகராறு ஏற்பட்டு அதனால் இந்த ெகாலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story