மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ 3 லட்சம் நகை பணம் கொள்ளை


மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ 3 லட்சம் நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 14 Aug 2021 10:22 PM IST (Updated: 14 Aug 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ 3¼ லட்சம் நகை பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்


மூங்கில்துறைப்பட்டு

தொழிலாளி

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் கணபதி மகள் அறிவொளி(வயது 48) தொழிலாளி. திருமணமாகாத இவர் அவரது தம்பியின் குழந்தைகளான தர்ஷன்(9), ஹர்ஷவர்தினி(6) ஆகியோருடன் வசித்து வருகிறார். அறிவொளி நேற்று முன்தினம் இரவு பின்பக்கம் உள்ள மெத்தை வீட்டை உள்பக்கமாக தாழ்பாள் போட்டு விட்டு முன் பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டில் குழந்தைகளுடன் தூங்கச் சென்றார். 

நகை-பணம் கொள்ளை

பின்னர் நேற்று காலை படுக்கையில் இருந்து எழுந்த அறிவொளி மெத்தை வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கே பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  மேலும் துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. தகரப்பெட்டியில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், ரூ.53 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அறிவொளி இரவு நேரத்தில் ஓட்டு வீட்டில் தூங்கியதை அறிந்து கொண்ட மர்மநபர்கள் மெத்தை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குர்ஷித் பாஷா, வீரன் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.  பின்னர் இது குறித்து அறிவொளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். தொழிலாளியின் வீ்ட்டில் புகுந்த மர்மநபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் புதுப்பட்டு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story