தியாகதுருகத்தில் குளங்களை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு


தியாகதுருகத்தில் குளங்களை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Aug 2021 10:30 PM IST (Updated: 14 Aug 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் குளங்களை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அதிகாரி சம்பத்குமாருக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்

கண்டாச்சிமங்கலம்

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று தியாகதுருகம் பேருராட்சிக்கு ட்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தியாகதுருகத்தில் உள்ள சையது குளம், பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள குளம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் 2 குளங்களையும் தூர்வாரி, சுற்றுச்சுவர், படிகட்டு மற்றும் நடைபாதைகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி செயல் அதிகாரி சம்பத்குமாருக்கு உத்தரவிட்டார். 
இதைத் தொடர்ந்து புக்குளம் காலனி செல்லும் சாலையில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர் அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறதா? இயற்கை உரம் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை எந்திரம் மூலம் தூளாக்கி இயற்கை உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி செயல் அதிகாரிக்கு அவர் ஆலோசனை வழங்கினார். 

சாலைப்பணி

மேலும் போலீஸ் லைன் தெரு பகுதியில் குடிநீர் விநியோகம், சாலைப்பணிகள், கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார். 
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் அருண் குமார், இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ், குடிநீர் திட்டப் பணியாளர்கள் கண்ணன், பழனி மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.




Next Story