கொடைரோடு அருகே அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு


கொடைரோடு அருகே அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 10:31 PM IST (Updated: 14 Aug 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொடைரோடு:
கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகராக ஸ்மார்ட் வகுப்பறை, ஆன்லைன் வழி கல்வி என பல்வேறு சிறப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் முன்மாதிரி பள்ளியாகவும் திகழ்ந்து வருகிறது. சமீபகாலமாக பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அம்மையநாயக்கனூரில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதில் பிற பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களும் இப்பள்ளியில் சேர்ந்தனர். 
அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு மட்டும் 100 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். இதையொட்டி 100-வதாக சேர்ந்த குஷில்காந்த் என்ற 1-ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரிய-ஆசிரியைகள் மாலை அணிவித்தும், ‘வாராயோ செல்லம் வாராயோ...’ என்று பாட்டு பாடியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆசிரியர்களின் இந்த ஏற்பாடு, அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Next Story