திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுகிறார்
75-வது சுதந்திர தின விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி வளாகத்தில் கலெக்டர் வினீத் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்
75-வது சுதந்திர தின விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி வளாகத்தில் கலெக்டர் வினீத் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் வினீத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்குகிறார். அதன்பின்னர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் வீட்டுக்கே சென்று தாசில்தார், துணை தாசில்தார்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அதுபோல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் இல்லை. பொதுமக்கள் மைதானத்துக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 9.05 மணிக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்கள் பாராட்டி, கவுரவிக்கப்படுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் குமரன் நினைவுத்தூண் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாநகரம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்து அதன் பிறகே அனுமதிக்கிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.
Related Tags :
Next Story