மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public road blockade in Thiruvannamalai demanding drinking water

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சன்னதி தெரு, துராபலி தெரு, கட்டபொம்மன் தெரு உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.  அந்தப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சன்னதி தெருவில் திடீரெனக் காலிக்குடங்களுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  நகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகப் பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி-அவல், பூஜை பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி-அவல் மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அலங்கார பொருட்களும் அதிக அளவில் விற்பனை ஆனது.
2. கடம்பத்தூரில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
கடம்பத்தூரில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடை, வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடை, வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் ஒட்ட வந்த ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
4. பேரம்பாக்கத்தில் பயன்பாடின்றி கிடக்கும் காவல் உதவி மையம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பேரம்பாக்கத்தில் பயன்பாடின்றி கிடக்கும் காவல் உதவி மையம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
5. திருப்பதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தர்கள் கைது
இலவச தரிசன டோக்கன்களை நேரடியாக வழங்க வலியுறுத்தி, திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி எதிரே ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.