போர்வெல் எந்திர லாரியில் குழாய்கள் திருட்டு வாலிபர் கைது
சின்னசேலம் அருகே போர்வெல் எந்திர லாரியில் குழாய்கள் திருட்டு வாலிபர் கைது
சின்னசேலம்
சின்னசேலம் அருகே கனியாமூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் பிரகாஷ்(வயது 26). இவர் அங்குள்ள போர்வெல் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரும், தன்னுடன் வேலை செய்து வரும் திவாகர்(23) இருவரும் கம்பெனி அலுவலகத்தின் அருகே உள்ள வராண்டாவில் படுத்து உறங்கினர்.
அப்போது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போர்வெல் எந்திர லாரியில் இருந்த துளை போட பயன்படுத்தும் 2 குழாய்களை மர்மநபர் திருடிவிட்டு மொபட்டில் தப்பி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பிரகாஷ், திவாகர் இருவரும் பின்னால் துரத்தி சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து சின்னசேலம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சின்னசேலம் அருகே உள்ள வினைதீர்த்தாபுரம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த சீனிவாசன்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 குழாய்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story