மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
குலசேகரன்பட்டினத்தில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உடன்குடி பரமன்குறிச்சி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பின்புறம் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உடன்குடி சுல்தான்புரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 39) என்பதும், விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 284 மதுபாட்டில்கள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story